
தென்னங்கீற்று நிலவொளியில்
உன் கண்களை நான் தேடுகிறேன்
பௌர்ணமிகளில் மட்டுமல்ல
வைகாசி தென்றல் காதோடு கதை பேசும்
சுகம் கூட சுகிக்கவில்லை
என்னருகில் நீயில்லை!
அழைப்புக்கள் இல்லாது சென்ற
வெள்ளிகளால் என்னுள் வெறுமை
புதிதுதான் எனக்கு
காத்திருக்கின்றேன்
காலத்தோடு கதைபேசி
காத்திரமான மன்றாடலுடன்!

