Saturday, June 14, 2008

உனக்காக.......


தென்னங்கீற்று நிலவொளியில்

உன் கண்களை நான் தேடுகிறேன்

பௌர்ணமிகளில் மட்டுமல்ல

வைகாசி தென்றல் காதோடு கதை பேசும்

சுகம் கூட சுகிக்கவில்லை

என்னருகில் நீயில்லை!

அழைப்புக்கள் இல்லாது சென்ற

வெள்ளிகளால் என்னுள் வெறுமை

புதிதுதான் எனக்கு

காத்திருக்கின்றேன்

காலத்தோடு கதைபேசி

காத்திரமான மன்றாடலுடன்!









Tuesday, January 29, 2008

துக்கமான இரவுகள்


தூக்கம் இன்றி கடந்த

துக்கமான இரவுகள்

என் தலையணைக்கும்

எனக்கும் மட்டும் தெரிந்த இரகசியம்

நிழல்களிற்குள் போராட்டமா?

நிஜங்களா என ஜீரணிக்க முடியாத கணங்கள்!

விடிவுகள் இன்றி கடந்த இரவுகள்

விடை காணா பொழுதுகள்

உன் நினைவுகளுடன்

நான் கடக்கிறேன்.......

Thursday, January 3, 2008

உன்னுடன் என் பொழுதுகள்


தனிமையை நான் உணரவில்லை-உன்

தோள்கள் எனை தாங்கிக்கொண்டன

அன்னையின் அணைப்பை

தந்தையின் காவலை

உன் அன்பில் நான் காண்கின்றேன்

என் வரையில் இது புதிதுதான்

என் பிழைகள் மன்னித்தாய் மறந்தாய்

என்னை எனக்கே உணரவைத்தாய்.

அதன் மென்மையையும் கூடத்தான்

உன்னுடன் என் பொழுதுகள்

தெவிட்டாத கணங்கள்!

Tuesday, December 18, 2007

நீயாக நீங்கின்......







எதிர்பாராத சந்திப்பு
ஏற்பட்ட உறவிது
ஒன்றல்ல இரண்டல்ல
ஐந்தாண்டு காத்திருப்பு
சந்தித்த வேளை
சிந்திக்கவில்லை
சுற்றமும் உறவும்பற்றி
இன்று உனது தாயார்
நேற்று உன் சிற்றப்பன்
உன் தம்பியும் கூட
வழியில்வைத்து
புரியவில்லை அவர்களிற்கு
தெரிவதெல்லாம்
சுற்றத்து வாய்கொழுப்புகள்
சொல்லிவிட்டேனவர்களிடம்
நீ என்னைவிட்டு நீயாக நீங்கின்
என் வழியில் நான் செல்வேன் என!

Tuesday, December 4, 2007

அவளிற்கு பின்னால் அவன்


காலையில் பரபரப்புடன் வீட்டிலிருந்து கிளம்பிய சரண்யாவிற்கு தற்போது தனது காதுகளை நம்பமுடியவில்லை ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் மலைத்து நின்றாள்.அவள் நண்பி வைஷாலி கைகளை குலுக்கி வாழ்த்திய போதுதான் தன் நிலைக்கு மீண்டாள். அலுவலகத்தில் சக நண்பர்கள் தெரிவித்த வாழ்துகளிற்கு நன்றியை கூறிவிட்டு தனது காரினை நோக்கி செகிறாள்
காரினை செலுத்திய சரன்யாவின் சிந்தனை தனது அன்பு கணவனின் பக்கம் செல்கிறது.ஓர் ஆணின் வெற்றிக்கு பின்னார் பெண் போல் ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னாலும் நிச்சயம் ஓரு ஆண் உண்டு,சரண்யாவின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் அவள் கணவன் குணாளன்.
குனாளன் ஒரு பொறியியலாளர்.கை நிறைய சம்பளத்துடன் தலைநகரில் வேலை செய்கின்றான். குழந்தையினை பாராமரிப்பது முதல் அன்றாட வீட்டு வேலைகள் வரை சரண்யாவிறு உதவிகளைசெய்யத்தவறுவதில்லை.வழமையாக காரினை செலுத்தும் வீதியாக இருந்த போதும் இன்று சரண்யாவிற்கு சற்று கடினமாகவே இருந்தது.ஏனெனில் தனக்கு கிடைத்த விருதினையும் அதானால் வந்த பதவி உயர்வினையும் கணவனிற்கு தெரிவிக்க வேண்டும் என்ற ஆவல் தான்.
யார் யாரோ வாழ்த்தினாலும் அன்பு கணவனிற்கு தெரியப்படுத்தி அவருடன் அந்த சந்தோஷத்தினை பகிரவேண்டும் என்ற அவசரம்.ஆமர் வீதி ரபிக் லைட்டில் சிவப்பு விளக்கு எரிகிறது.அதில் கூட வாகனத்தை நிறுத்தி நேரம் வீணாகிறதே என்ற கவலை ஒரு புறம்.கையடக்க தொலைபேசி மூல விடயத்தை குணாளனுக்கு தெரிவித்து இருக்கலாம்.இருந்தும் காலையில் வழியனுப்பி வைக்கையில் உச்சியில் முத்தமிட்டு கைகளை அழுத்தி "வெற்றி உனக்கே" என உந்துதலழித்த குணாளனை நினைக்கையில் சரண்யாவின் கண்கள் கலங்குகிறன.
செல்கிறது அவளது நினைவுகள் 10 வருடங்கள் பின் நோக்கி,
வயல் செழிப்பு மிக்க பச்சை பசேல் என காட்சியழிக்கும் ஊரில் நடுத்தர குடும்பத்தில் பிறாந்தவள் தான் சரண்யா.அதே ஊரை சேர்ந்த பாஅசாலை அதிபரின் மகன் குனாளன். ஒரே பாடசாலையில் பயின்றாலும் சரண்யா குணாளனை விட 4 வயது இளையவள்.குணாளனுடன் முற்றத்து மாமர நிழலில் விளையாடும் போது விளையாட்டில் தோற்றால் சரண்யாவை குணாளன் அடித்து துரத்தியதும் உண்டு.அப்போதெல்லாம் அழுதுகொண்டு மறுவார்த்தை பேசாது போய்விடுவாள் சரண்யா.
பருவ வயதை அடைந்த பின்பு குணாளனுடன் விளையாடுவதையும் கதைப்பதையும் சரண்யா நிறுத்தி விட்டாள்.இருந்தும் சில வேளைகளில் குணாளன் கதைக்க முற்பட்டாலும் முன்போல் கதைப்பது கூட இல்லை, இருந்தும் இருவரையும் கல்லூரி நாட்களில் கண்ணுக்கினிய சோடிகள் என சகபாடிகள் கதைக்க மட்டும் தவறவில்லை.எனினும் இருவரும் இதனை காதில் வாங்கி குழம்பியதாகவும் தெரியவில்லை.
ரபிக் லைட்டில் பச்சை விளக்கு எரிகிறது.பின்னே வாகனங்களின் ஹோர்ன் சத்தம் , காரினை செலுத்துகிறாள் சரண்யா தொடர்கிறது அவளது கடந்த கால நினைவுகளும்

Tuesday, October 16, 2007

சொந்தமடி நீ எனக்கு


சொல்லத்தான் தெரியவில்லை சொந்தங்களை


சோதித்துப்பார்க்காதே உயிரே வந்துவிடு


அள்ளிக் கொடுத்த இன்பங்களும்


அரட்டை அடித்த வேப்பமர நிழல் கற்குந்தும்


காற்று வாங்கிய மொட்டை மாடியும்


பெயர் பொறித்த மரங்களும்


ஏறித்தாவி விளையாடிய தேமா மரமும்


ஆண்டுகளானாலும் அழியவில்லை


தேடிப்பார்த்த பொழுது


நினைவுகளாலும் சிதையவில்லை


பாடித்திரிந்த பொழுதுகளும்


பட்டம் விட்ட வயல் வெளியும்


கைகோர்த்து நாம் சென்ற பாதைகளும்


உன்னோடு என் பொழுதுகளும்


கண்ணீரிலும் கரையவில்லை


எண்ணச்சிதறல்கள் விதி மாறிப்போனாலும்


கண்ணில் உன்விம்பம்


களங்கமின்றி சிரிக்கின்றது....










Monday, June 18, 2007

அர்த்தங்கள்

பாவங்கள் பல பண்ணிவிட்டு
புண்ணியம் தேடி
தியாகங்கள் பல புரிந்து
யாகம் ஒன்று பண்ணினோம்
முடிவுகள் இன்றி
விடியல்கள் இன்றி
விரைந்தோடுகிறது காலங்கள்
கலக்கமுடன் விழித்திருக்கின்றோம்
யாகங்களின் நம்பிக்கையில்
விதைக்கப்பட்ட இளம் இரத்தங்கள்
உணர்த்த முயன்ற கதைகள் பல
அவையெல்லாம்.....
காலத்தால் உணரப்படாது
மண்ணுக்குள்ளே விதைக்ளாய்!
கண்ணிமைக்கும் பொழுதில்
கனவாக மாறும் வாழ்க்ககயில்
கண்ணீரும் கம்பலையுமோ
எம் வாழ்வின் அர்த்தங்கள்?