என் கண்கள் பனித்தது கூட
தெரியாமல் தொடர்கிறது
உன் வேகம்
பேச்சுக் கணைகளால்
நீ புண்படுத்திய நெஞ்சம்
இன்னும் ஆறவில்லை
போதும் இத்துடன் விட்டுவிடு
என்னையும் என் கனவுகளையும்
கூண்டுக்குள் அடைபட விருப்பமில்லை
உன் பேச்சுகளிற்கு "ஆமா" போட
இனி மேலும் விருப்பமில்லை
உனக்காக என்னை மாற்றினேன்
என் கொள்கைகளை கூட
நீ மட்டும் மாறவில்லை
நம் உறவிற்காக கூட
சென்று வருகின்றேன்
நீ போட்ட விலங்கையும் தாண்டி
உன் வாசல் மீறி
என் கனவுகளுடன்
சுதந்திரமாக
Tuesday, May 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஓ...!
அழகிய கவிதை...!
சற்று சிந்திக்க வைக்கிறது....!
பிரிவுகளில் தானே
வலிகள் உணரப்படுகின்றன....?
வலியின்றி எப்படி பிரிவு...?
சாத்தியம் தான்...
உறவுகளே வலியானால்
பிரிவிலும் இருக்குமோ
இனிமை....
உலகில் பல விடயங்களை
மாற்ற முடிவதே இல்லை;
முயற்சியால் கூட...
உங்கள் கவிதை,
கவிதை தருகிறது;
'உலகையே மாற்ற முடிய்ம்
என்னால்
உனக்காக....
உன்னை மட்டும்
மாற்ற முடிந்தால்,
எனக்காக....!'
வாழ்த்துகளுடன்,
வேல்.சாரங்கன்.
www.vaanampaadi.blogspot.com
Post a Comment