பாவங்கள் பல பண்ணிவிட்டு
புண்ணியம் தேடி
தியாகங்கள் பல புரிந்து
யாகம் ஒன்று பண்ணினோம்
முடிவுகள் இன்றி
விடியல்கள் இன்றி
விரைந்தோடுகிறது காலங்கள்
கலக்கமுடன் விழித்திருக்கின்றோம்
யாகங்களின் நம்பிக்கையில்
விதைக்கப்பட்ட இளம் இரத்தங்கள்
உணர்த்த முயன்ற கதைகள் பல
அவையெல்லாம்.....
காலத்தால் உணரப்படாது
மண்ணுக்குள்ளே விதைக்ளாய்!
கண்ணிமைக்கும் பொழுதில்
கனவாக மாறும் வாழ்க்ககயில்
கண்ணீரும் கம்பலையுமோ
எம் வாழ்வின் அர்த்தங்கள்?
Monday, June 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Simply great!
Keep it up
மறைமுகமான உங்கள் கருத்துக்கள் அனுபவித்தவர்களிற்கு மாத்திரமே புரியும்! தொடரட்டும் உங்கள் முகவரியை தேடிய பயணங்கள் வாழ்த்துக்கள்
Post a Comment